முதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் பிரதேசத்தைப் புனித பூமியாக, நகர அபிவிருத்தி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சு இதற்கென பலகோடி ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புனித பிரதேச திட்டத்தின் ஒருகட்டமாக முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலின் நீர்த்தடாகம் நவீன வசதிகளைக்கொண்ட மலசலகூடத்தொகுதி என்பனவற்றை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கென 45 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் மர்சூக் அகமட் லெப்பை தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அமைச்சு 25 லட்சம் ரூபாவையும் பள்ளிவாயல் நிர்வாகம் 20 லட்சம் ரூபாவையும் இதற்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 2000 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.