திமுக கூட்டணி கட்சிகள் – பட்டியலை வெளியிட்டார் கருணாநிதி

karunanithi.jpgதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இதில் ஏதாவது புதிய கட்சி (பாமக) சேருமானால் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றார். 2 நாட்களில் தொகுதிப் பங்கீட்டையும் அறிவிப்போம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாமக, தேமுதிக ஆகியவற்றின் இழுத்தடிப்பு காரணமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் தேமுதிக ஒரு மாதிரியாக தனது நிலை குறித்து சொல்லி வைத்துள்ளது. பாமக கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் நேற்று திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்த பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

அதன்படி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விவரம் …

திமுக,
காங்கிரஸ்,
விடுதலைச் சிறுத்தைகள்,
இந்திய யூனியன்
முஸ்லீம் லீக்,
மனித நேயக் கட்சி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இன்னும் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். புதிய கட்சிகள் கூட்டணியில் சேருமானால் அப்போது அதையும் தெரிவிப்போம். தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் என்னை வந்து சந்தித்தபோது, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்ற கூட்டணி பற்றி விவாதித்தோம் என்றார் கருணாநிதி.

வேறு கட்சிகள் சேருமானால் அதை அறிவிப்போம் என்று முதல்வர் கூறியுள்ளது பாமகவையே குறிப்பதாக தெரிகிறது. 26ம் தேதி பாமக திமுக அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அன்றுதான் பாமக செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. இதை மனதில் வைத்துத்தான் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளதாக நம்பப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பல்லி
    பல்லி

    அப்படியானால் தோல்வி உறுதியாகி விட்டதா?? ஜயாவின் கணக்கு பிழைத்து விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. தாங்கள் வெற்றி பெற
    வேண்டுமாயின் எதிர் அணி கூட்டு உடைய வேண்டும் அதுக்கான வேலை திட்டத்தை வெக்கத்தை விட்டு சோ மூலம் தொடங்கலாமே.

    Reply
  • msri
    msri

    பல்லி சொல்வது எப்போதும் பலிக்காது!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கலைஞர் அவசரமாக கூட்டணிக் கட்சிகளின் பட்டியலை வெளியிட்டதும் ஒருவருக்கு ஆப்பு வைக்கத் தான். இந்த வாரம் முடிவதற்குள் நிலைமை மாறும். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் என்ற நிலை மாறி வரும் காத்திருங்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லி சொல்லியது எது பலிக்கவில்லை. இது பலிக்காமல் இருக்கவேண்டுமாயின் பல்லியின் மருத்துவம் அவசியம். அதையும் பல்லி பின்னோட்டத்தில் எழுதி விட்டேனே.

    Reply
  • msri
    msri

    இந்தியாவில் மீண்டும் காங்கிரசு கூட்டணி ஆட்சியே! பல்லிச் சாத்திரத்தின் கணிப்பென்னவோ?

    Reply
  • sanganathaam
    sanganathaam

    our karunathi is rock no body cant remove him.he voice of tamils no one can stop him. like swami and chow are comedian they can ony make us laugh.thats all.
    for india present goverment is better for indians,for tamil nadu kalaijar.

    Reply