ஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் அவர்களை நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கைதுசெய்தனர். இவர் ‘மாற்றம்’ பத்திரிகையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆரம்பகாலங்களில் நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் பணியாற்றியுள்ளதுடன், தேசம்நெற் இணையத்தளத்திலும் நஜிமிலாஹி எனும் பெயரில் இவர் நேரடியாக எழுதி வந்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது,
ஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீமை கொழும்பு பொரலை கொட்டா வீதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். அப்போது தன்னை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ஆவணங்களை பாதுகாப்பு தரப்பிடம் சமர்ப்பித்தும் அவைகளை இராணுவத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாளஅட்டையைக் காட்டிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் பொரளை பொலிஸ் நிலையத்தில் எஸ்.எம். நஜீமை ஒப்படைத்தனர்.
பொரலை பொலிஸ் நிலையம் அவரை விசாரணைக்குட்படுத்தி சரிகண்ட போதும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் கட்டாயத்தால் ஊடகவியாலாளர் எஸ்.எம். நஜீம் பொரலை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.
இதனையடுத்து ‘மாற்றம்’ பத்திரிகையின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் வந்து நிபந்தனைகளின் அடிப்படையில் இரவு 10.30 மணியளவில் விடுவித்துள்ளனர். ஊடக அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பிடம் காட்டிய போதும் பாதுகாப்புத்தரப்பினர் தகாத வார்த்தைப்பிரயோகங்களை உபயோகித்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டதாக ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
மேலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டையை இராணுவத்தினர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பது புரியாத விடயமாகவே இருக்கின்றது. இச்சம்பவத்தைப் பார்க்குமிடத்து ஊடக அடையாள அட்டை என்பது இலங்கையைப் பொறுத்த மட்டில் அர்த்தமற்றதொன்றாகவே எண்ணத் தோன்றுகின்றது.
JUDE
ஊடகவியலாளர்களை பாதுகாக்கத் தவரிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதனை மேலும் உறுதிப்படுத்துபவையாக உள்ளது ஊடகவியலாளர் நஜீம் மீது இராணுவத்தினர் நடந்து கொண்ட முறையாகும். பொருப்பு வாய்ந்த அரசாங்க திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என அந் நாட்டின் இராணுவத்தினர் குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எம்மத்தியில் எழுகிறது.
சுறுக்கமாக சொன்னால் கத்தியின் விழிம்பில் நடக்கும் கெதிதான் இலங்கை ஊடகவிலாளல்களின் நிலைமை.