வவுனியா மன்னார் பகுதிகளில் உள்ள ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் கடந்த ஞாயிறு அன்று தம்முடன்; இணைந்து கொண்டதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த சென்ற வார இறுதியில் வவுனியா சென்றிருந்த போதே ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் ஈபிடிபி உடன் தங்களை இணைத்துக் கொண்டனர். ஈபிஆர்எல்எவ் கட்சியில் இருந்து பிரிந்த டக்ளஸ் தேவானந்த ஈபிடிபி கட்சியை உருவாக்கினார். இப்போது தாய்க் கட்சி உறுப்பினர்களே ஈபிடிபியில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர்.
சிறிது காலத்திற்கு முன்னர் ஈபிஆர்எல்எவ் – ஈபிடிபி கட்சிகளிடையே முறுகல் நிலையொன்று இருந்து வந்தது. கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈபிஆர்எல்எப் – புளொட் – கூட்டணி ஆகியவை உருவாக்கிய முக்கூட்டணயில் ஈபிடிபி இருக்கவில்லை. இந்த முக்கூட்டணி பாரிஸில் நடத்திய கூட்டத்திலும் ஈபிடிபி க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வமைப்புகள் அனைத்துமே அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் தமக்கிடையே முட்டி மோதிக் கொள்வதும் கூட்டணி அமைப்பதும் பின்னர் கோபிப்பதும் இயல்பான அரசியலாகி விட்டது.
இதற்கிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் யுத்த முனையில் இருந்து மீண்ட மக்கள் கௌரவமாக நடத்தப்படுவதாகவும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் மார்ச் 20ல் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக அரசுக்கு ஆதரவான ஒரு கருத்தை வெளியிட்டு இருப்பது இதுவே முதற்தடவையாகும். இன்னும் சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் மதில் மேல் பூனைகளாக இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிரெலோ என்ற பிரிவினரும் ஈபிடிபியுடன் நெருக்கமான உறவைக் கொண்டு உள்ளனர். வடக்கில் ஒரு புறம் மக்கள் மரணப் போராட்டத்தில் நிற்க மறுபுறம் தேர்தல் கூட்டுக்களும் செயற்பாடுகளும் அதற்கான வேலைகளும் தீவிரமாகி உள்ளன.
chandran.raja
கடந்தகாலத்தில் புலித்தலைமையைத் தவிர மற்றைய இயக்கத் தலைமைகள் விட்டு கொடுப்பு மனோபாவம் நிறையவே! இருந்திருக்கிறது. அதைத்தான் இன்றும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சிலர் மகிந்தா ராஜபக்சாவை அளவுக்கு மீறியே விமர்சிக்கிறார்கள். தமிழ்மக்களின் வாழ்வு சீரழிந்து அவலப்பட்டு போனதிற்கு பிரபாகரன் பங்கு மிகபெரிய பாத்திரம் வகித்தது என கவனத்தில் எடுக்கிறார்கள் இல்லை. கேட்டால்…. ஏன் நாங்களும் தான் எதிர்கிறோம் என்பார்கள். இரண்டையும் பகைப்பது குழந்தப்பிள்ளை கதை மாதிரி இல்லையா?
ஈ.பி.டி.பி யும் சரி டெலோ அமைப்பாளர் அபுயூசப்பும் சரி தமிழ்-மூஸ்லீம் மக்களுக்கு கிடைத்த பொன்னான தலைவர்கள். வரலாற்றை கசடற கற்றவர்கள் எதிர்நீச்சல் போட்டு அரசியலை கற்றவர்கள் நடத்தி வந்தவர்கள். தமிழ்-மூஸ்லீம் மக்கள் இவர்களில் நம்பிக்கை கொள்வதிற்கு வரலாறு வழிவிட்டிருக்கிறது.
murugan
பிழை கண்டு பிடிக்க மட்டுமே வாய் திறக்கிற முதலாளி தலைமை இங்கிருக்க தொண்டர்கள் வேறு என்ன செய்வதாம்?
பல்லி
இப்படியும் பிழைக்கலாம்.என சில வழி முறைகள் உண்டு. அதை சிலர் பின்பற்றி விட்டனர். மற்றபடி புதிதாக சொல்வதானால். தாய் வீட்டில் இருந்து மாமியார் வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் குடி போனதாக சிலர் பேசிக்கிறார்கள். எல்லோரும் கருனாவாகி விட முடியாது. அதை கொழும்பு தாங்காது. பல்லி எழுதியதில் ஏதாவது தவறு கண்டால், யாராவது இனைந்த அரசியல் பிரமுகர்கள் எந்த நோக்கத்துக்காக தோழருடன் இனைந்தவர்கள் என விபரமாக கூறட்டும்.அதன் பின் பல்லியின் பலனா?? இவர்களது நனைவா சரியென ஒரு குட்டி மன்றம் தோழர் தலமையில் அரங்கேற்றுவோம்.
padamman
லண்டனில் ஒரு முறை டக்ளஸ் கூறினார் தான் அரசங்கத்துடன் நிற்காவிட்டால் இங்கு லண்டனில் தான் இருக்கவேண்டும் என்று
மற்றைய அமைப்பில் இருப்பவர்களை தனது அமைப்பில் கொள்கை ரீதியாக இனைத்தால் நல்லது அதுவே தனது சுயநலத்துக்காக இனைத்திருந்தால் அவரும் ஒரு பிரபாகரன்தான்
lavan
எல்லாம் பணம்தான் பணம் பாதாழம் வரை பாயும் என்பர் இப்போ தாய்வீடு வரை இனி?
sugethia
அன்பு நண்பன் அருட்செல்வன்
கொடூர யுத்தத்தால் ஏற்பட்டுவரும் மனித மரணங்களும் சதைதுண்டங்களாக சிதைந்து போகும் உடல் உறுப்பக்களால் அங்கவீனமாக்கப்படும் அப்பாவி மக்கள் ஒருபுறம் மறுபுறம் உணவு தண்ணி இன்றி தெரு ஓர மரங்களை உறைவிடமாக்கி விலங்குகளுடன் விலங்குகளாக்கப்பட்டிருக்கும் மக்கள். பால்மா வேண்டாம் கால்வயிற்றுக்கு பளங்கஞ்சியிருந்தாலே உயிர்பிளைக்கும் நிலையில் சிறுவர்கள்.
இந்த மனித அவலங்களுக்கு மத்தியில் மாண்புமிகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த கோழிக்காலுடன் புரியாணி விருந்து வைக்க அதை படம் பிடித்து ஈபிடிபி இணைய வலையில் முக்கிய செய்தியாக மனித நேயமற்று பிரசுரிக்க அதுபற்றி எதுவித சுறனண கோபம் விமர்சனம் ஏதும் இன்றி அன்பு நண்பன் அருட்செல்வன் ஆய்வு கட்டுரை வரைகிறார். யாரை திருப்திபடுத்த?. ஒருபுறம் மக்கள் பட்டிணியால் சாகிறார்கள் மறுபுறம் ஈபிடிபி மாண்புமிகு அமைச்சர் கோழிக்காலுடன் புரியாணி விருந்துவைக்கிறார். நண்பன் அருட்செல்வனின் அரசியல் நிலைப்பாடு தான் என்ன? அரசியல் வேண்டாம்! மனிதாபிமானமாவது வேண்டாமா?!.
அருட்செல்வனின் கவலை எல்லாம் முக்கூட்டணி பாரிஸில் நடத்திய கூட்டத்திலும் ஈபிடிபி க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுதான். ஆனால் அதுகூட தவறான செய்தி. பாரிஸில் இருந்து தகவல் தருபவர் /தருபவா தவறான செய்தியை தந்து உதவியிருக்கிறார்கள். ஈபிடிபி க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்தும் கொண்டனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாரிஸ் வந்திருந்த போது எல்லோரும் போய் பார்த்தோம் படம் எடுத்தார்கள் பிரசுரித்தார்கள் அதற்காக எல்லேரும் ஈபிடிபி யில் இணைந்துவிட்டதாக அர்த்தமா?. இலங்கையில் ஆஸ்பத்திரி அரசங்கத்தின்ரை. அங்க நாங்கள் வைத்தியம் பாக்கபோனால் நாங்கள் என்ன அரசாங்கத்தின்ர ஆதரவாளர்களாகி விடுவோமா. அமைச்சரும் அதுபேலத்தான் அவரும் ஒரு அரசாங்கத்தின்ரை அங்கம். நல்லது கெட்டதிலை அவருக்கும் பங்கிருக்கு. ஆஸ்பத்திரியில் வைத்தியம் பாக்கபோற மாதிரித்தான் இவரிட்ட போய் சமுககுறைபாடுகளை சுட்டி காட்டலாம். செய்வதும் விடுவதும் அவரின் விருப்பம்.
நண்பன் அருட்செல்வன் இதற்கு அரசியல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகட்டுரை எழுதினால் நிதர்சனம்.கொம் லெவலுக்கு தேசம்நெற் வந்துவிடும். இன்று நாம் செய்யவேண்டியவை ஏராளம்.
இடம் பெயர்ந்து போதிய வசதிகள் இன்றி துன்பங்களை அனுபவிக்கும் மக்களை குறிப்பாக மாணவர்கள் சிறுவர்கள் பற்றி எழுதுங்கள் !உதவுங்கள் ! நானும் நாமும் உங்களுடன் உதவுகிறோம் . இன்று அவசியமானதும் அவசரமானதும் இதுதான்.
-சுஐpத்தா-
Aruldchelvan
நட்புடன் சுஜிதிய
உங்கள் கருத்து ரொம்பவும் முரண்பாடாக இருக்கிறது. நீங்கள் தேசம்நெற்றில் நான் எழுதாத விடயத்தை நான் எழுதியதாக கற்பிதம் செய்து கொண்டு விமர்சனம் செய்திருக்கிறீர்கள். தயவு செய்து நான் எழுதிய செய்தியையும் (அது ஆய்வுக் கட்டுரையல்ல) அதற்கு நீங்கள் எழுதிய விமர்சனத்தையும் படிக்கவும்.
1.’கொடூர யுத்தத்தால் ஏற்பட்டுவரும் மனித மரணங்களும் ….’ – எனது செய்திகளில் இந்த வன்னி மக்களின் அவலம் பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறேன். தேசம்நெற்றில் இது தொடர்பான ஏராளமான கட்டுரைகள் செய்திகள் வெளிவந்து உள்ளது.
2. ‘அமைச்சர் டக்ளஸ் தேவானந்த கோழிக்காலுடன் புரியாணி விருந்து வைக்க அதை படம் பிடித்து ஈபிடிபி இணைய வலையில் முக்கிய செய்தியாக மனித நேயமற்று பிரசுரிக்க…’ – நீங்கள் இந்த விமர்சனத்தை அந்த இணையத்தளத்தில் வைப்பதே பொருத்தமானது. ஆனால் தேசம்நெற்றில் நான் எழுதிய செய்தியில் அவ்வாறான எக்குறிப்பும் வரவில்லை.
3. ‘அதுபற்றி எதுவித சுறனண கோபம் விமர்சனம் ஏதும் இன்றி அன்பு நண்பன் அருட்செல்வன் ஆய்வு கட்டுரை வரைகிறார். யாரை திருப்திபடுத்த?.’ – முதலில் நான் எழுதியது ஆய்வுக்கட்டுரையல்ல. செய்தி. உங்களுடைய விமர்சனம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் அவ்வமைப்பை விட்டு வெளியெறி தங்களுடன் முரண்பாடு உள்ள ஒரு அமைப்பில் இணைந்ததாக அதாவது எனது செய்தி இதுதான் ”வவுனியா மன்னார் பகுதிகளில் உள்ள ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் கடந்த ஞாயிறு அன்று தம்முடன்; இணைந்து கொண்டதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த சென்ற வார இறுதியில் வவுனியா சென்றிருந்த போதே ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் ஈபிடிபி உடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.” இதில் செய்தி எழுதிய நான் சுறணைப்பட கோபப்பட எனக்கு என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை.
4. ‘நண்பன் அருட்செல்வனின் அரசியல் நிலைப்பாடு தான் என்ன? அரசியல் வேண்டாம்! மனிதாபிமானமாவது வேண்டாமா?!.’ – ஒரு செய்தியாளனாக மக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் வழங்குவதே எனது பொறுப்பு. ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்து கொண்டதாக ஈபிடிபி தெரிவிக்கிறது. ஈபிஆர்எல்எப் அது பற்றி மெளனமாகவே இருக்கிறது. இங்கு ஒரு செய்தி சொல்லப்பட்டு உள்ளது. அதில் எனக்கு அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அங்கு என்னுடைய கருத்தாக பதிவு செய்யப்பட்டது இதுவே.’இவ்வமைப்புகள் அனைத்துமே அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் தமக்கிடையே முட்டி மோதிக் கொள்வதும் கூட்டணி அமைப்பதும் பின்னர் கோபிப்பதும் இயல்பான அரசியலாகி விட்டது.’ இந்தக் கருத்தையே நான் இப்போதும் கொண்டு உள்ளேன்.
5. ‘அருட்செல்வனின் கவலை எல்லாம் முக்கூட்டணி பாரிஸில் நடத்திய கூட்டத்திலும் ஈபிடிபி க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுதான்.’ – இது நீங்கள் வந்துள்ள முடிவு. அதில் கவலைப்படுவதற்கு எனக்கு எதுவும் இல்லை.
6. ‘நண்பன் அருட்செல்வன் இதற்கு அரசியல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகட்டுரை எழுதினால் நிதர்சனம்.கொம் லெவலுக்கு தேசம்நெற் வந்துவிடும்.’ – ஒரு செய்தி முக்கியமானதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது.? இலங்கை அரசாங்கம் தனக்கு எதிரான விமர்சனங்களை தேவையற்றது என்று கருதும். ஈபிடிபி மனித உரிமைகளை மீறி உள்ளது என்று செய்தி பொய்யானது அர்த்தமற்றது என்று ஈபிடிபி கூறும். ஈபிஆல்எல்எப் எறுப்பினர்கள் ஈபிடிபியில் இணைந்து விட்டார்கள் என்றால். அந்தச் செய்தி ஈபிடிபி க்கு முக்கிய செய்தியாக இருக்கும். ஆனால் ஈபிஆர்எல்எப் ற்கு அர்த்தமற்ற செய்தி முக்கியமற்ற செய்தியாக இருக்கும்.
நிதர்சனம்.கொம் லெவல் என்பது நீங்கள் அந்த ஊடகத்தின் மீது வைக்க வேண்டிய விமர்சனம்.
7. ‘இடம் பெயர்ந்து போதிய வசதிகள் இன்றி துன்பங்களை அனுபவிக்கும் மக்களை குறிப்பாக மாணவர்கள் சிறுவர்கள் பற்றி எழுதுங்கள் !உதவுங்கள் ! நானும் நாமும் உங்களுடன் உதவுகிறோம் . இன்று அவசியமானதும் அவசரமானதும் இதுதான்.’
– நிச்சயமான உண்மை. தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறொம் இன்னும் எழுதுவோம். உண்மைகள் உறங்குவதில்லை.
கிழக்குத் தேர்தலுக்கு பாரிஸில் கூட்டம் போடும் அரசியல் கட்சிகள் வன்னி மக்களுக்காகவும் கூட்டம் போட்டு போராட்டம் நடத்தினால் பயனுள்ளதாய் இருந்திருக்கும். கட்சி அரசியலுககுள் சிக்காமல் மக்கள் நலனில் அக்கறை கொள்வோம்.
அருட்செல்வன்.
sugethia
நண்பன் அருட்செல்வன்
என்னுடைய சில கருத்துக்கள் தொடர்பாக நான் சுயவிமர்சனம் செய்து கொள்கிறேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட முக்கூட்டணி “பாரிஸில் நடத்திய கூட்டத்திலும் ஈபிடிபி க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்ற செய்தி உண்மையற்றது . ஈபிடிபிக்கு அழைப்பு விடப்பட்டது அவர்களும் கலந்து கொண்டனர் இந்த தவறான செய்து குறித்து நீங்கள் எதுவித கருத்தும் கூறவில்லை………..
எது எவ்வாறாயினும் கிழக்குத் தேர்தலுக்கு பாரிஸில் கூட்டம் போடும் அரசியல் கட்சிகள் வன்னி மக்களுக்காகவும் கூட்டம் போட்டு போராட்டம் நடத்தினால் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் இதற்கும் இன் நிலமைக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்து விடமுடியாது.
அன்று இருந்த நிலமை வேறு இன்று காணப்படும் நிலமைகள் முற்றிலும் முரண்பாடானது . இன்நிலமைகள் ஆரோக்கியமானவை அல்ல ! இன்நிலமைகள் மாற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை!.
இறுதியாக இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண்பதற்கு ஆதரவு அளிப்பது என்பது வேறு இலங்கை அரகாங்கத்திற்கு ஆதரவளிப்பது என்பது வேறு.மனித விரோத போக்குகளை யார் செய்தாலும் தான் சர்ந்த அமைப்பு செய்தாலும் யார் ஒருவன் கண்டிக்க அதற்கு எதிராக குரல் கொடுக்க தயாரக இருக்கிறானோ அவனும் அவனை போன்றவர்களுமே சமூகம் சார்ந்தவர்களாக இருக்கமுடியும். புலிஎதிர்ப்பான அமைப்புக்கள் யாவும் அரசாங்கம் சார்ந்தவை என்ற ஆய்வற்ற அரசியல் தவறானது.
– ஒரு செய்தியாளனாக மக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் வழங்குவதே எனது பொறுப்பு. நீங்கள் குறிப்பிடுவது போல் அனைத்து செய்திகளும் மக்களுக்கு வளங்கப்படவேண்டும் ஆனால் உங்களால் விடுபட்டுபோன ஏராளாமான செய்திகளை என்னால் குறிப்பிட முடியும். உங்கள்மீது குற்ற பத்திரிக்கை வாசிப்பது என்னோக்கமல்ல. விமர்சனமும் வாசிப்பும் எம்மை சரியான பாதை நோக்கி மேலும் வளிநடத்தும்.
-சுஐpத்தா-