தமது மனைவியை கொன்று திருக்கோணேஸ்வரம் கோயில் வளவில் புதைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த திருகோணேஸ்வர ஆலய முன்னாள் குருக்களுக்கு திங்கட்கிழமை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்;
சிவகடாட்ச குருக்கள் திகாகேஸ்வர ஐயருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது, இந்த வழக்கை கடந்த 21 ஜூலை 2006 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.இதனையடுத்து 26 ஜனவரி 2009 ஆம் குடிவரவு குடியகலவு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து, 27 ஆம் திகதி ஜனவரி மாதம் 2009ல் அவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டார்