இந்தியா வின் 17 மாநிலங்களிலுள்ள 124 பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலுக்கு இன்று திங்கட் கிழமை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவிருக்கின்றது.
வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் தினமாக மார்ச் 31ம் திகதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தினமாக ஏப்ரல் 2ம் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இதன் நிமித்தம் வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமைகளுக்கு அடுத்துவரும் சில தினங்களுக்குள் தீர்வு காணப்படலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து கட்டமாகத் தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது.
முதற்கட்டத் தேர்தல் ஆந்திரமாநிலத்தில் 22 தொகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 தொகுதிகளிலும் மராட்டிய மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், சதீஷ்கார் மாநிலத்தில் 11 தொகுதிகளிலும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 06 தொகுதிகளிலும், அஸாம் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், அருணாசலம் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், மேகாஸா மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், லட்சத்தீவு மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மிசோரம் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், நாகலாந்து மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற விருக்கிறது.
இதேவேளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்க ளிலுள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கிறது.