மட காஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.
வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள். அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.
மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.