திரு கோணமலை மாணவி வர்ஷாவின் கொலை தொடர்பான விசாரணைகள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்த்தனவின் வழி நடத்தலில், மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை பொலிஸ் தலைமைக்காரியாலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது தெரிவித்தார். இலங்கைப் பொலிஸ் சேவையின் 145 ஆவது வருட நிறைவைக்குறிக்கும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சிறுமியின் கொலை இடம்பெற்று முப்பத்தாறு மணித்தியாலங்களுக்குள், சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்தனவின் தலைமையில் பொலிஸ் குழு எடுத்த தீவிர நடவடிக்கையினால் இது சாத்தியமாயிற்று என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.