“வணங்கா மண்’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் – கடற்படை எச்சரிக்கை

Vanni_Missionவன்னிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வரும் “வணங்கா மண்’ என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்படுமென இலங்கை கடற்படை எச்சரித்துள்ளது.

வன்னியில் படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் வழங்கும் சுமார் 2 ஆயிரம் மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்களுடன் “வணங்காமண்’ என்ற கப்பல் எதிர்வரும் 26 ஆம் திகதி பிரிட்டனிலிருந்து இலங்கையை நோக்கி புறப்படவுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கொடியுடன் இந்த கப்பல் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானோர் வன்னி மக்களுக்கென்ற பேரில் இந்த உணவுப்பொருட்களை விடுதலைப்புலிகளுக்கு கொண்டுவரமுற்படுவதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  அத்துடன் இந்த கப்பலானது இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் எதிர்ப்பையும் மீறி “வணங்காமண்’ என்ற அந்த கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் கொண்டு செல்ல பிரிட்டனைச் சேர்ந்த தமிழமைப்பு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதேநேரம், அந்த கப்பலின் உரிமையாளர் குறித்த விபரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • thushiyanthan
    thushiyanthan

    தம்பிமாரே நீங்கள் இந்த இலங்கை அரசாங்கத்தின் கதைகளுக்கு பயந்துவிடாமல் வணங்காமண்ணை அனுப்புங்கோ கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் போகுதோ இல்லையோ துணிந்த்து அனுப்புங்கோ நடேசன் அண்ணா சொல்லிப்போட்டார் பிரபாகரன்தான் போரை வளினடத்துகிண்றாராம் எனவே நீங்கள் பயப்படாமல் அனுப்பிவையுங்கோ, இல்லாவிட்டால் பிரித்தானியத் தமிழர் கொடுத்த பொருள்களை விற்க புதிதாய் கடை திறக்க உங்களில் பலர் தயாராவதை அவர் அறிந்த்தால் உங்கள் கதி?

    Reply
  • raj
    raj

    என்ன கதை இது எடுத்த விடயம் எந்த விதத்திலும் தடைபடது கப்பல் முல்லைத்தீவு செல்லும் இது உறுதி.எமது தலைவன் மீது ஆணை இளம் பருதி சொல்லிவிட்டார் தமிழ் ஈழம் கிடைப்பதற்கு இன்னும் வெகு நாள் இல்லை தமிழ் ஈழம் கிடைத்தால் வேறு என்னா எமது நாடு கப்பல் என்னா விமானம் கூடா போகலாம். புலிகளின் கனியாத தாகம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வழக்கமாக “விசா” எடுத்ததிற்கு அப்புறம் தான் ரிக்கற் எடுப்பார்கள். இங்கு ரிக்கற் எடுத்த பிறகும் “விசா” எடுக்கிற யோசனையும் இல்லை அந்த சிந்தனையும் இல்லை. புலி பிறந்த காலத்திலிருந்து அத்துமீறிய நடவடிக்கையில் இருந்தார்களோ அவ்வாறே இன்றுவரைக்கும் தாங்கள் மாறவில்லை என துல்லியமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இப்படி ஒரு அறிக்கை இலங்கை அரசிடமிருந்து வருமென்று தானே எமது ஐரோப்பா வாழ் சுருட்டல் மன்னர்களும் பார்த்துக் கொண்டிருந்தவை. எண்டாலும் சுருட்டிற மட்டும் சுருட்டி முடிய, நிலைமைகள் தற்போது மோசமாக இருப்பதால் வணங்காமண் பயணத்தை ஒத்தி வைத்திருப்பதாகவோ அல்லது கைவிட்டு விட்டதாகவோ ஒரு அறிக்கை விட்டுவிட்டால் போச்சு.

    Reply
  • thurai
    thurai

    புலி பலமாக இருக்கும்போது களவாக ஆயுதக்கப்பல் ஓட்டம். புலி பலமிழந்து, உலகமெங்கும் கால்களில் விழுந்து சமாதானம் கேட்கின்ற நிலையில் “வணங்கா மண்’ என்ற கப்பல்.

    துரை

    Reply
  • murugan
    murugan

    இப்ப வணங்கா மண்ணுக்கென்று இணையத்தளமும் திறந்துள்ளார்களாம். கிரடிட் கார்டகள் மூலம் பணம் தரட்டாம். பேனா பென்சில்களோடு வந்து ஜிரிவி யில் அறிவிக்கிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முருகன்
    வணங்காமண் அறிவிப்பு விடும் போதே இணையத்தளமும் திறந்து கிராபிக் மூலம் வணங்காமண் கப்பல் படமும் போட்டு படம் காட்டத் தொடங்கி விட்டார்கள். அப்ப தானே எங்கட சனமும் அதை நம்பி அள்ளிக் கொடுப்பினம்.

    Reply
  • வணக்கம்
    வணக்கம்

    வணங்கா மன்ணுக்காக உண்டியல் குலுக்கும் போராட்ட வா(ந்)திகளே!, நீங்கள் “வணக்கம் போட்டுதானே”, ஒளிந்து, ஒளிந்து மேற்குலகம் வந்து சலாம் போட்டுதானே இன்று கோழியும், பருப்பும் வயிறார சாப்பிடுகிறீர்கள், வன்னியில் பசியோடிருக்கும் மக்களை வணங்கவேண்டாமென்று சொல்லி, அவர்கள் வணங்காமல் பயிர் செய்து சாப்பிடும் “விளை நிலங்களை” வெடி மருந்துகள் மூலம் விஷமாக்கி விட்டு, இப்போது, நீங்கள் வணங்கி பெற்ற பிச்சைகளின் மிச்சம் மீதியை அங்கு அனுப்புகிறீர்களே அதுவாவது போய் சேருமா?.

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த வணங்கா மண்ணும் வேண்டாம்.
    மக்களை மதிக்காத தலைவனும் வேண்டாம்.
    புலம் பெயர் புலியும் வேண்டாம்.
    புத்தி பேதலித்த கமினிஸ்ற்றும் வேண்டாம்.
    கொடிநடுவே மிருக படமும் வேண்டாம்.
    தயவு செய்து அங்கு வாழும் மக்களுக்கு நம்மால் முடிந்த (முடியும்) உதவிகளை யாருடைய தலையீடும் இல்லாமல் எமது குடும்பங்களுக்கு (அங்கு இருக்கும்) செய்வதுபோல் எமது அறிவுக்கு எட்டியபடி அவர்களிடம் நாம் செய்யும் உதவி போய் சேரும்படி செய்ய முடியும்தானே. அங்கிருக்கும் எமது தெரிந்தவர்கள் மூலம் சின்ன சின்ன உதவிகளை செய்வதை விட்டு இந்த ஓடாத கப்பல் அடங்காத பொருள் சேகரிப்பு வெக்கம் இல்லாத பணம் திரட்டல். கொடி(புலி)விற்றல் இப்படி புலம்பெயர் தேசத்தில் ஏமாத்து கலை தெரிந்த பலர் உலாவுவதுக்கு ஏமாரலாமா?? அதை விட தொலைகாட்ச்சியில் வந்தல்லவா ஏமாத்துகிறார்கள். கொடுமை என்னவெனில் எம் உறவுகழுக்கு நாம் உதவ தமிழகத்தில் இருந்து பணம் கட்டி சில தலைகளை லண்டன் கூட்டி வந்து தொல்லை காட்ச்சியிலும் கூட்டமும் போட்டு சொல்ல வைப்பதை பார்த்தால் சாறி விளம்பரத்துக்கு நடிகைகளை செயல்படுத்துவது போல் இல்லை

    Reply