தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் அதிருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். வினோநோகராதலிங்கத்தின் நாடாளுமன்ற உரை தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் வாழும் வன்னிப் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பானதும், அமைதியானதுமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக வினோநோகராதலிங்கம் தெரிவித்திருந்தார். மேலும் மக்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் பூரண கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதுவரை எவ்வித கருத்து வேறுபாடுகளோ பிரிவினைகளோ ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரவேண்டுமென்பதே அனைவரதும் விருப்பமாகும். அது தொடருமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார்.
thushiyanthan
தங்கேஸ்வரி அக்காவுக்கு அரசியல்தான் புரியவில்லை எண்று நினைத்தால் அரசியல்வாதிகளின் அடிப்படையே புரியாமல் இருக்கிண்றது, வினேதாரலிங்கம் அறிக்கை வெளியிடார் பாராளுமண்றத்திலும் பேசினார் ஆனால் பேசாமல் அறிக்கை விடாமல் இன்னும் எத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமண்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்த்து செயற்பட விரும்பியுள்ளார்கள் என்பது மிக விரைவில் வெளிவரும் தவறினாலும் வர இருக்கும் பாராளுமண்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாவது வெளிவரும் அக்கா.
வன்னியில் மட்டுமிருந்த்தல்ல திருமலையில் இருந்த்து வந்த்தவரும் இப்போ யோசிக்கத்தொடங்கிவிட்டாராம். தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நடவடிக்கையினால் மாவிட்டபுரத்து கந்த்தசாமியே கதிகலங்கி நிற்கிறாராம்.
பார்த்திபன்
தங்கேஸ்வரி அக்கா இப்ப என்ன சொல்ல வாறியள். வினோநோகராதலிங்கம் அப்படி என்ன பிழையாக அறிக்கை விட்டு விட்டார். உண்மைகளை சொல்லக் கூடாதெனன்று கூத்தமைப்பில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றீர்களா?? தலையிருக்க வாலாடுவது போல் ஆளாளுக்கு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் கூத்தமைப்புத் தலைவர் சம்பந்தன் ஏன் இதுபற்றி இன்னும் அறிக்கை விடவில்லை. நாங்கள் முன்பு சம்பந்தன் “நாங்கள் புலிகளை ஆதரிக்கவுமில்லை, புலிகளுடன் எந்தவித தொடர்புகளையும் பேணவுமில்லை” என்று விட்ட அறிக்கையை மறந்து விட்டோமென்று சொல்லி அடுத்த அறிக்கையை ஒருக்கால் விடச் சொல்லுங்க.
damilan
வினோ எம்பி டெலோ இயக்கத்தில் இருந்து எம்பியாக வந்தவர். இதற்கு முன்பும் எம்பியாக இருந்தவர். அவர் மனசாட்சியுடன் உண்மையைப் பேசியுள்ளார். வன்னித் தொகுதியில் தெரிவானராகையால் மக்களின் கஸ்ட நஸ்டங்களில் பங்கு கொள்பவர். மன்னாரில் என்ன பிரச்சினை நடந்தாலும் உடன் முன் நிற்பவர். இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர். உங்களை மாதரி அரசியல் எடுபிடியல்ல அவர் நீங்கள் ஒருத்தனுக்காக அரசியல் நடத்திறியள் அவர் மக்களுக்காக அரசியல் நடத்துரார்.
thushiyanthan
தமிழன் சொல்லுகிறார் வினோதாரலிங்கம் ரெலோவில் இருந்த்து எம் பியாகியவராம் மக்களுக்காக அரசியல் நடாத்துகிண்றாராம், கிழிந்த்தது கைலகிரி, தமிழ்த் தேசியக் கூத்தமைப்பில் எவரும் மக்களுக்காக அரசியல் செய்யவும் இல்லை சேவையும் செய்யவில்லை , புலி தேய்ந்து பூனையாகியதால் அரசுடன் இணைந்து அமைச்சராகி அடுத்த தேர்தலிலும் வெல்லும் ஒரே நோக்கம்தான் காரணமே தவிர இவர்கள் எல்லாம் மக்கள் சேவகர்கள் இல்லவே இல்லை
vanthiyadevan
MR THUSHIYANTHAN MR VINO IS REMBERING THE 29TH APRIL TO 6 TH MAY 1986.
WHY U PEOPLE CANT UNDERSTAND THE FACT LET HIM TO REALISE PLEASE GIVE HIM A HAND,
kana
Well done Mr Vino MP yu said the truth – thanks