“நீங்கள் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் பின்னோக்கி தள்ளப்படுகின்றோம்.”- ஹோட்டல் தொழில்துறையினர் கவலை !

மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்  இடம்பெற்றால்  அது எங்களை பாதிக்கும் என இலங்கையின் ஹோட்டல் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்கள்  மீண்டும் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள ஹோட்டல் தொழில்துறையினர்  உலகநாடுகளின் சுற்றுலாப்பயணிகள் மீண்டும் இலங்கை வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

அரசியல் சமூகத்தினர் தங்கள் நாடகங்களை நிறுத்திவிட்டு நாட்டின் மக்களின் சிறந்த நலன்கள் குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் இதுஎன ஸ்ரீலங்கா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றால் அது சிறந்த விடயம் ஆனால் வன்முறைகள் இடம்பெற்றால் மக்களினதும் வர்த்தகங்களினதும் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  ஸ்ரீலங்கா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது

எங்கள் தொழில்துறை நெருக்கடியிலிருந்து மீண்டும் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் பின்னோக்கி தள்ளப்படுகின்றோம் இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள்  சிந்திக்கவேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • BC
    BC

    உண்மையே. இலங்கைக்கு போக விரும்பும் தமிழர்களே வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து இலங்கை செல்வதை தவிர்கிறார்கள்.
    //அரசியல் சமூகத்தினர் தங்கள் நாடகங்களை நிறுத்திவிட்டு நாட்டின் மக்களின் சிறந்த நலன்கள் குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் //

    Reply