கேரளாவில் உள்ள விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் 3 மணி நேரத்தில் கேரளாவில் உள்ள ஒரு விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
இது குறித்து கேரள போலீசாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு பிரிவு போலீசாரும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். விமான நிலையத்துக்கு வருபவர்கள், பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. புலிகள் பெயரில் குண்டு மிரட்டல் வந்ததால் கேரளாவில் பரபரப்பாக இருக்கிறது.
ramu
அதெல்லாம் மதியும் மற்ற பிள்ளைகளுமாம்
palli
யார் வேண்டுமானாலும் எம்மை (ஈழதமிழரை) வைத்து விபசாரம் செய்யலாம் என்னும் போக்கை தமிழருக்கு ஏற்படுத்தி கொடுத்த புலிகள் இனியாவது அதுக்குரிய மாற்று மருந்தை(மநிதநேயத்தை) உருவாக்க வேண்டும். அப்போது பல்லி பொன்றோர் முடிந்தளவுக்கு உதவ முன் வரலாம். தயவு செய்து புலி சான்றோர் முயற்ச்சிக்கவும். நாம் ஒன்றும் விராதிகளல்ல. பகைவர்கள்தான்.