இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள முல்லைத்தீவு பகுதியை கைப்பற்ற சிங்கள ராணுவம் பல முனைகளிலும் தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்குள்ள புதுக்குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது விட்டதாக ராணுவம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து அவ்வப்போது மாறுபட்ட தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில், பிரபாகரன் புதுக்குடியிருப்பு பகுதியில் தான் இருப்பதாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரனையும் அவரது மகன் சார்லஸ் அந்தோணியையும் பார்த்ததாக, அங்கிருந்து வெளியேறி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ள மக்கள் தெரிவித்ததாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது
murugan
சுவாரஸ்யமாய் தான் இருக்கிறது.
raj
பிரபாகரன் இன்னும் மக்கள் மத்தியில் நடமாடுகின்றார் என்றால் எமது மக்கள் இன்னும் விழிக்கவில்லை எப்படியும் ஒரு நாள் மக்கள் பிரபாகரனை அடித்தே கொல்வார்கள் இது நடக்கும் பொறுத்து இருந்து பார்ப்போம்.
பகீ
அப்ப நோர்வேக்கொ ஓடினது, மலேசியாவில் ஒழிச்சது, தாய்லாந்தில் குளிச்சது எல்லாம் பம்மாத்தா?
palli
பகீ உலகத்தை மட்டுமல்ல தமிழரையும் ஏமாத்தலாமென நினக்குது புலி. ஆனால் அதுதான் அவர்களின் பலவீனம் என்பதை புலிக்கு மட்டுமல்ல
எம்மவர்க்கும் புரியவைக்க நாம்(பகீ முதல் பல்லி வரை) நெடும் தூரம் பயணம் செய்ய வேண்டும்.
palli
பிரபாகரன் கண்ணில் பட்டவர்கள் தப்பி வர முடியுமா என பல்லிக்கு சந்தேகம்தான். அதிலும் மகனுடனா? மீண்டும் பெரும் சந்தேகம். இது
சரியான தகவலாக இருக்காது என்பது பல்லியின் அனுபவம்.
Kullan
இது பெரிய பகிடிதான். சாதாரணமாக அமைதியான நேரத்திலேயே பங்கருக்குள் படுத்துக்கிடந்து விளைந்த தலை. இப்படியான காலகட்டத்தில் அதுவும் மகனுடன் மக்கள் மத்தியில் கண்டதாகச் சொன்னால் இது அண்டப்புளுகு ஆகாசப்புழுகுதான். தேசியத்தலைவர் தேசத்து மக்களுடன் ஒன்றாக எப்ப இருந்தார். மக்கள் தலைவன் மக்களுடன் மக்களாக இருந்த காலங்கள் எப்பாவது உண்டா? பங்கர் தானே வாழ்க்கை. ஆளைப்பார்க்கத் தெரியவில்லையா?
chandran.raja
பெரும்பாண்மையான புலம்பெயர் தமிழ் மக்களின் அன்றைய “தேசியதலைவர்”. இன்றைய “வன்னிஅகதி”.
வரலாறு என்ற காட்டாற்று வெள்ளத்தில் கடல்படை விமானப்படை நவீனரகஆயுதங்கள் வக்கிரபுத்தி போன்றவற்றை இருந்த இடம் இல்லாமல் அடித்துசெல்கிறது என்பதை கண்முன்னால் கண்டுகொண்டிருக்கிறோம்.
இனிமேலாவது புலம்பெயர் புலிக்குட்டியள் கற்பனையில் பறப்பதைவிட்டு ஈழதமிழ் மக்களுக்கு ஆக்கபூர்மான வழிகளில் உதவிபுரிவதிலும் அரசியலிலுக்கு வழிதேடுவதிலும் தமது காலத்தை செலவழிப்பார்களா? புலம்பெயர் தமிழ்மக்கள் இல்லாவிட்டால் புலிகள் இந்த அசுர வெறிதனத்தையும் இந்த மாபெரும் அவலங்களையும் உயிர்அழிவுகளையும் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள். புலிகளின் அழிவோடு சிங்களஅரசுடன் நடத்திய ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வருகிறது. வரும்.இதில்எந்த வித சந்தேகமும் இல்லை. அறிவை இனிமேலாவது பயன்படுத்தி ஈழமக்களின் நலன்களை தூக்கி நிறுத்துவார்களா? இந்த புலம்பெயர் தமிழ்மக்கள் ?