புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன
திருவனந்தபுரம், கொச்சின் கரிப்பூர் ஆகிய விமான நிலையங்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுப் பிரிவினர் தெரிவித்ததையடுத்தே இவற்றின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை பாதுகாப்பு நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தலையடுத்து இந்த மூன்று விமான நிலையங்களுக்குமான மேலதிக பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரளா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.