கொழும்பில் இருந்து ஏ9 வீதியூடாக தனியார் வர்த்தகர்களும் தமக்குத் தேவையான பொருள்களை அனுப்ப வசதியாக வாகன அணியை ஏற்பாடு செய்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் நாயகம் அலுவலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் நாயகத்தின் ஏற்பாட்டில் 22லொறிகள் மூலம் நிவாரணப் பொருள்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
குடாநாட்டைச் சேர்ந்த தனியார் துறையினரும் ஏ9 வீதியூடாக பொருள்களை வாகன அணி மூலம் எடுத்துச் செல்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சீனி, பருப்பு, கோதுமைமா ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால் ஏற்பாடு செய்யப்படும் வாகன அணிகள் மூலமாகவும்
ஏனைய பொருள்களை தனியார் துறையினர் ஏற்பாடு செய்யும் வாகன அணி மூலமாகவும் குடாநாட்டுக்கு எடுத்துச் செல்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. யாழ். செயலகத்தினரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திணைக்களமும் இணைந்து தனியார் துறைக்குரிய வாகன அணியை ஏற்பாடுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகன அணிக்குப் புறம்பாக கப்பல் கள் மூலமும் குடாநாட்டுக்குப் பொருள்களை எடுத்துவரும் பணிகள் தொடர்ந்து நடை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.