பாராளு மன்றத்தில் காவி உடைக்கு அனுமதி வழங்கப்படும் போது பாடசாலைகளில் பர்தா உடைக்கு தடைவிதிப்பது நியாயமா என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாராளுமன்றத்தில் அம்ஜான் உம்மா பர்தா உடையுடன் வருகிறார். கண்ணியமிக்க தேரர்கள் காவி உடையுடன் வருகின்றார்கள். அறிவாளிகளை உருவாக்கும் பள்ளியில் மட்டும் பர்தா உடைக்கு அனுமதி மறுக்கப்படுவது சரிதானா என்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் மாணவிகளின் இஸ்லாமியச் சீருடைக்கு மேல்மாகாணத்தில் மட்டுமின்றி திருமலை மாவட்டத்திலும் தடைவிதிப்பு தொடர்கிறது. அன்று பதுளையில் ஆரம்பித்த இந்தத்தடைவிதிப்பு இன்று கொழும்பு திருமலை வரை சென்று விட்டது. அன்று யாரோ, எதற்கோ துகிலுரிந்தார்கள் என்பது வரலாறு. இன்று பள்ளி முதல்வர்களின் பணிப்பில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா ஆடைகள் களையப்படுகின்றன. அன்றும் இன்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ், சிங்கள மாணவர்கள் தம் வழக்கமான ஆடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்த நிலையில் பாடசாலைவருவதைத் தடுக்கும் அதிபர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது ஆறுதலைத் தந்தாலும், ஆங்காங்கே காணப்படும் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும் போதே கல்வி அமைச்சரின் அறிவிப்பு பயனுள்ளதாய் அமையும் என்பது சங்கத்தின் கருத்தாகும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
Rajai
some time you very good man….
பார்த்திபன்
நியாயமான கேள்வி தானே??. இதற்கு நியாயமான தீர்வு வழங்குவதே அவசியம்.
Kusumpan
மதங்கள் என்றும் கோவில்களுடனும் வீடுகளுடனும் நிற்பது அவசியம். என்று மதம் அரசியலுக்குள் நூளைந்ததோ அன்று தொடகியது தரித்திரம் உலகிற்கு. மதம் நுளைந்த இடமெங்கும் மதுவும் போதையும் நிறைந்தது ஆகிறது. மதம் அபினைப்போன்றது. காவியும் வேண்டாம் பர்தாவும் வேண்டான் திருநீறும் வேண்டாம் சிலுவையும் வேண்டாம். மனிதராய் மனிதம் காவுவோம்