வன்னியில் இருந்து யாழ். மாவட்டத்துக்கு வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் யாழ். அரச அதிபருக்கு அறிவித்துள்ளனர்.
மாணவர்களுக்குத் தேவையான கொப்பிகள் மற்றும் உபகரணங்களை இணங்கண்டு அது குறித்து தெரியப்படுத்துமாறு இந்தியத் தூதரகம் யாழ். செயலகத்தைக் கேட்டுள்ளது. தேவை குறித்த யாழ். செயலகத்தின் அறிக்கை கிடைத்த பின்னர் இந்தியத் தூதரகம் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.