பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு ஒதுங்கக் கூரையும் உண்ண உணவும் மட் டும் போதாது என்றும் அம்மக்கள் கண்ணியமாகவும், கெளரவமாகவும் நடத்தப்படல் வேண்டும் என்பதே எமது அரசின் கொள்கையாகும் என்றும் இதனையே தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அரச பணிப்பாளர்களை நேற்று சந்தித்து கலந்து ரையாடிய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கப் பிரதி நிதி என்ற வகையிலும் வட மாகாணத்தின் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் தான் இங்கு வருகை தந்து இப்பகுதியின் தற்போதைய பாரிய நெருக்கடிமிக்கப் பிரச்சினையான இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களின் பிரச்சி னைகளுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அரச பணியாளர்கள் தங்களை வெறுமனே அரச பணியாளர்களாக மட்டும் கொள் ளாது தமிழ் பேசும் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளாகவும் கருதி இயன்றவரை நேர்மையான முறை யில் உணர்வு பூர்வமாக தங்களது பணிகளை மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
எந்த வகையிலும் எந்த இடத்திலும் துர்ப்பிரயோகங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்ட சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய வரையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களுக்கான பணி களை உரிய முறையில் முன்னெடுப்பதை தலையாய பணியாகக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இடம்பெயர்ந்து வரும் பொது மக்களை வருடக் கணக்கில் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்பதை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தளவிற்கு விரைவில் அம்மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமோ அந்தள விற்கு விரைவாக அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடிய மர்த்தும்வரை அம்மக்களை நல்ல முறையில் பராமரித்து பாதுகாப்பது நமது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.
palli
தோழரே உங்கழுக்கு கோடி புன்னியம் இதை மகிந்தாவின் இல்லத்துக்கு தேனீர் அருந்த போகும்போது அனைவர்க்கும் சேர்த்து சொல்லுங்கோ. செயல் படுத்துங்கோ. அதை விட்டு பேப்பருக்கு போஸ் கொடுப்பது பல்லு விழுந்தவர் பற்பொடி தேடியது போலும் பல்லியின் பின்னோடம் போலும் காமொடியாய் இருக்குதுங்கோ.
singan
welldone keep on doing good work and let us enjoy democratics in sri lanka – we need a place and time to say what we want – please visit to vavuniya camps and talk these peoples – we waitting for this