முல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு கடந்த ஒரு மாதத்தில் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டோரில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 11 தொடக்கம் மார்ச் 14 வரை முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்ட 3,635 பேரிலேயே மார்ச் 20 ஆம் திகதி எடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி 40 பேர் உயிரிழந்தனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 31. 1735 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
திருமலை ஆஸ்பத்திரியில் 31 பேர் மரணமானார்கள்.
கண்டியில் 7 பேரும் கொழும்பில் 2 பேரும் உயிரிழந்தனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் தற்போது 431 பேர் தங்கியுள்ளனர்.
ஏனைய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு;
கண்டி115, கொழும்பு 63, மஹரகம 01, சிகிச்சை முடிந்து கொழும்பிலிருந்து 15 பேரும் கண்டியிலிருந்து 57 பேரும் மீண்டும் திருமலை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிவரப்பட்டனர். பொலநறுவை ஆஸ்பத்திரிக்கு 121 பேரும் கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு 80 பேரும் தம்பலகமம் ஆஸ்பத்திரிக்கு 75 பேரும் அனுப்பப்பட்டனர். 1893 பேர் வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் நலன்புரி முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். மன்னார் ஆஸ்பத்திரிக்கும் 908 பேர் அனுப்பப்பட்டனர்.