ஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொண்டதை ரஷ்யா தற்போது அங்கீகரித்தது. அமெரிக்க ஜனாதிபதியாக புஷ் இருந்த போது ஈரான் நாட்டை “ரவுடி நாடு” என குறிப்பிட்டிருந்தார்.
“ஈரான் அரசால் அன்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு அதிநவீன எஸ். 300 ரக ஏவுகணையை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த விஷயம் சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து ரஷ்யா இந்த உண்மையை ஒப்புக்கொண்டது இது குறித்து ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப் பிடுகையில், “எஸ். 300 ஏவுகணையை ஈரானுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டாலும், சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் ஏவுகணையை விநியோகிக்கவில்லை இன்னும் அந்த ஒப்பந்தம் காலாவதியாகவில்லை.
படிப்படியாக இந்த ஒப்பந்தத்தை அமுல் செய்ய யோசித்து வருகிறோம் என்றார். ஈரானுக்கு இந்த ஏவுகணையை விநியோகம் செய்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் பகையை சம்பாதித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.