இயக்குனர் சீமானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

seeman.jpgஇலங் கைத் தமிழர் பிரச்சினைக்காக புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புதுச்சேரி காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் சீமான் நெல்லை பொலிஸ் ஆணையர் மஞ்சுநாதா முன்னிலையில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமானை கைது செய்த பொலிஸார், புதுச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று புதுச்சேரி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இயக்குனர் சீமானிடம், நீங்கள் விடுதலை பிணை கேட்டு உள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு இயக்குனர் சீமான், இது சம்பந்தமான விவாதம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சீமானை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    இவர் விடுதலை செய்யபட வேண்டுமானால் வன்னி போர் முடிவுக்கு வரவேண்டும். ஆகவே இரண்டுமே நல்ல விடயங்கள்தான். முதலாவது
    வன்னி போர் முடிவுக்கு வர வேண்டும். மக்கள் நின்மதியாய் வாழ. இரண்டாவது சீமான் விடுதலை ஆக வேண்டும் அவர் குடும்பம் மகிழ்ச்சியாய் வாழ. சீமான் வெளியில் வரும்போது இந்திய தமிழக அரசியல் எத்தனை மாற்றம் அடைந்துள்ளது என்பதும் இது தமிழகத்துக்கு புதிதல்ல என்பதும் புரியும். இருப்பினும் ஈழ தமிழருக்காக சிறை சென்ற அவரை எம்மவர் மறக்க மாட்டார்கள். பல்லியின் பலன் சரியோ தெரியவில்லை இவரை விடுதலை செய்ய அன்னை ஜெயலலிதா முயற்ச்சிக்கலாம். அவரும் விடுதலையாகி அம்மையாரின் காலில் விழலாம்.

    Reply
  • santhanam
    santhanam

    இவர்கள்கள் இலங்கை பிரச்சனையில் தலையிடுவதை விட தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் அடிப்படை பிரச்சனைகளை முதலில் தீர்வு காணச்சொல்லவும் இவர்கள் தங்கள் லாப நட்டகணக்குக்கான ஈழபிரச்சனையை தலையில் தூக்கி கொண்டு திரிகிறார்கள்.

    Reply
  • george
    george

    you taik when you cease to be at peace with your thoughts

    Reply