சட்டவிரோத கடல் அட்டை பண்ணையால் பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு !

சட்டவிரோத கடல் அட்டை பண்ணையால் பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, கிராஞ்சி- இலவங்குடா கிராம மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ச்சியான எதிர்ப்பு தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அட்டைப் பண்ணை அமைப்பதற்காக கடற்கரையோரமாக இருக்கின்ற கண்டல் தாவரங்களை அழிப்பதால், மீன் இனப்பெருக்கம் தடைப்படுவதாகவும் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கடல் அட்டை பண்ணை அமைப்பதனால் பெண்தலைமத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மனித உரிமை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட முறைப்பாடுக்கு அமைய விசாரணைக்கு வருகை தந்திருந்த நீரியல் வளத்துறை அதிகாரிகள், அட்டை பண்ணை அமைப்பதற்கு எந்தவித சிபாரிசும் வழங்கவில்லை என கூறியிருந்தாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

………………………

இதே நேரம் இன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஒலைத்தொடுவாயில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் நடைபெற்றிருந்தததும் குறிப்பிடத்தக்து.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *