தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. .
இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக செய்து வந்தார். சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
santhanam
இந்த ஊடக.ஊகபணியாளரிற்கு வீரவணக்கம் பல்லி ஆழ்ந்த கவலையில் இருப்பதாக கேள்விபட்டேன்.
murugan
போராட்டமே படுத்து விட்டது. இப்படிப்பட்டவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு ஒரு பெறுமானமும் இல்லாமல் புலி தடுமாறிக் கொண்டிருக்கிறது.
palli
சந்தானம் பல்லி கவலையில் இருப்பார் என்பது உன்மைதான். காரனம் ஒரு ஊடகவியாளன் படும் துன்பம் பல்லி அறியும். காரனம் பல்லியே உளவாளி என சொல்லும் போது உன்மையில் கருத்து முரன்பாடுக்கப்பால் ஒரு ஊடகவியாளன் படும் துன்பம் தேசம்நிர்வாகிகள் படுவது பல்லிக்கு தெரிவதால் எப்படியிருக்கும் என்பது தெரிந்ததே. இருப்பினும் சந்தானம் பல்லியை வம்புக்கு இழுப்பதற்க்காகவேனும் ஒரு ஊடகவியாளனுக்கு வீர வண்க்கம் செலுத்திய உங்களுக்கு நன்றி. அத்துடன் பல்லி போதையில் இருக்கிறார் என சந்தானம் எழுதினால் அது செய்தி. பல்லி கவலையில் இருக்கிறார் என யார் சொன்னாலும் அது உனர்வு தமிழ் உனர்வு. பல்லியும் சிறி குடும்பத்துக்கு தனது குடுமபம் சார்ந்த அனுதாப செய்தியை தேசம் மூலம் தெரிவித்து கொள்கிறது.