நாடு பெரும் பொருளாதாரப் படுகுழியில் வீழ்ந்துள்ள இவ்வேளையில், மக்கள் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தாமரை கோபுரத்தைப் பார்த்து யாரும் மகிழ்ச்சியடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற்று நிர்மாணிக்கப்பட்டதுதான் தாமரைக் கோபுரம்.
இதன் அடிவாரத்தில் உள்ள குடிசைகளில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த கடனை வரி வடிவில் செலுத்த வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.