யாழ்ப்பாணம் – அச்சுவேலி, நவகிரி பகுதியில் போதை வில்லைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 448 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவகிரி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19 வயதான சந்தேகநபர் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(20) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.