குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள “சுடர்ஒளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதிவான் ஜெஹான் பலப்பிட்டிய முன்னிலையில் இவரை ஆஜர் செய்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், கொழும்பில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் தொடர்பில் வெளிநாடுகளிலிருந்து இவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மூன்று மாத தடுப்புகாவல் உத்தரவினை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அத்துடன், சுடரொளி பிரதம ஆசிரியர் தொடர்பில் மருத்துவ அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து, வித்தியாதரனை தடுத்து வைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 26ஆம் திகதி கல்கிசையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இருவரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.