ஆஸ்கர் விருதுகள் பல பெற்றுள்ள ஆங்கிலத் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தையும், ஹாலிவுடன் திரைப்படமான தி டார்க் நைட் திரைப்படத்தையும் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாட்டக் காலத்தில் தாம் தொலைக்காட்சியில் திரையிடப் போவதாக இரான் நாட்டின் அரச தொலைக் காட்சி அறிவித்துள்ளது.
திரைக்கு வந்து சில காலமேயான புது திரைப்படங்களை திரையிடுவது இரான் நாட்டு தொலைக்காட்சியில் வழக்கமேயல்ல. இரானுக்கு வெளியேயிருந்து வரும் பாரசீக மொழி செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இருந்து இளைஞர்களின் கவனத்தை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நிருபர்கள் கூறுகின்றனர்.