சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி.) புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தரவரிசையில் இதுவரை முதலிடதிலிருந்த நியூஸிலாந்து அணித் தலைவர் டேனியல் விட்டோரி இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் சோபிக்கத் தவறியதை அடுத்தே இரண்டாவது இடத்தில் இருந்த நுவன் குலசேகரவுக்கு முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதில் இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே வீழ்த்திய டேனியல் விட்டோரி புதிய தரவரிசைப்படி 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நெதன் பிரக்கன் இப்புதிய தரவரிசையில் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார்.
இதேவேளை,ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் நுவன் குலசேகர முதலிடததைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.