பல்கலைக் கழகங்களினுள் பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுமாயின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ரஜரட்ட மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் பொலிஸ் சோதனை நிலையங்களை அமைப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஒன்றியத்தின் இணைப்பாளர் உதேவ பிரேமரட்ன இதனைத் தெரிவித்தார்.
இவ்விரு பல்கலைக்கழகங்களிலும் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த செயற்பாட்டை கைவிடுமாறு நாம் கோருகின்றோம். எமது வேண்டுகோளையும் மீறும் பட்சத்தில் இதற்குத் எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.