ஏ9 பாதையூடாக கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்து தன்னிடம் அது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார். இதன்படி சாதாரண தனியார் பஸ்களும் சொகுசு பஸ்களும் சேவையிலீடுபடவுள்ளன.
சுமார் 500 தனியார் பஸ்கள் ஏ9 பாதையூடாக சேவையிலீடுபடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். தெற்கில் இருந்து பௌத்த யாத்திரிகர்கள் நயீனாதீவுக்கு போய்வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடமும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோல இ.போ.ச.பஸ்களும் இச் சேவையில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பகீ
அப்ப ரயில் இல்லையா? அடடா பொப்பிசை பாட ஆவலாயிருந்தோமே!
பார்த்திபன்
அப்ப வரியில்லாச் சேவை தொடங்கப் போகினம். புலிகள் தினமும் கோடிக் கணக்காக சுரண்டிப் பிழைக்க வழி சமைத்த பாதை. இந்தச் செய்தி சாதாரண மக்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும், புலிகளுக்கும், புலி ஆதரவாளர்களுக்கும் தான் கவலையைக் கொடுக்கும்.
பார்த்திபன்
பகீ நீங்க பொப்பிசை பாடுவீங்களோ அல்லது என்ன பாடுவீங்களோ ரயில் சேவையும் தொடங்கத் தான் போகின்றது. தற்காலிகமாக மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டதால் ஏதோ ரயில் சேவையே இல்லாமல் போய் விட்டது போல் புளங்காகிதம் அடைகின்றீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு வரி அறவிட முடியாத போக்குவரத்துகள் கவலையளிக்கத் தான் செய்யும்.
palli
500 பஸ்சில் வந்து போகுமளவுக்கு என்னதான் கொழும்பில் விசேடம். இருப்பவர்களையே மருந்துபோல் சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் பொலிசில் பதிவிட வேண்டுமென பொலிஸ்மா அதிபர் கந்தஸட்டி விரதம் இருப்பதாக கொழும்பு செய்தி சொல்லும்போது திரும்பவும் பஸ்மூலம் இறக்குமதி தேவையா.
போக்குவரத்து நடப்பது மகிழ்ச்சிதான். ஆனால் போக்குவரத்து மட்டுமே நடத்துவது பயமாக உள்ளது. வட்டிக்கு கடன் வாங்கி வடை சுட்டானாம் வையாபுரி என்பது போல் இல்லாமல் யதார்த்தமாக என்ன முடியுமோ அதை மட்டும் அரசு செய்தாலே போதும். அதை விட்டு வடிவேலு சிறைக்கு போவது போல் ஏலம் விடுவது அரசுக்கு தகுந்த செயலல்ல.
Rajai
பல்லி !நல்லது நடக்க விடமாட்டீங்களே… அரசு எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதுதான் உங்க பிழைப்பு…
palli
நல்லதா?? எது? அது?