மன்னார் மூர்வீதி பிரதான வீதி மற்றும் சின்னக்கடை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல்களினை மேற்கொண்டனர்.
இதன் போது அப்பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் அலுலகங்களுக்குச் சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் தேடுதல்களை மேற்கொண்டதோடு வீடுகளில் உள்ளவர்களது பெயர் விபரங்கள்களையும் பதிவு செய்து கொண்டனர்.
இதேவேளை மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் காலை 10.30 மனிமுதல் 11.30 மணிவரை பொலிஸார் வரவழைக்கப்பட்டு சோதனைகள மேகொள்ளப்பட்டது.
இதன் போது போக்குவரத்திற்காக காத்திருந்த மற்றும் தேவைகளுக்கா வந்திருந்தவர்கள் என சுமார் 500 பேர் வரை சோதனைக்குற்படுத்தப்பட்டனர்.எனினும் இந்த நடவடிக்கைகளின் போது எவரும் கைது செய்யப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.