2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டு இலங்கை சுகாதார துறையில் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக பிராந்திய அமைச்சர்களின் மாநாடு (17) கொழும்பில் ஆரம்பமானது இதில் பல நாடுகளின் பிராந்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சுகாதாரம் தொடர்பான கல்வியினை இன்று நாட்டில் அனைவருக்கு பெற்றுக்கொடுக்க கூடியதாக அமைந்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக அமைச்சர்களின் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுவது எமக்கு கௌரவத்தை ஈட்டித்தந்துள்ளது. அதேவேளை எதிர்வரும் ஜூலை மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ நா கூட்டத்தொடரில் சுகாதார சேவை அபிவிருத்தி தொடர்பான யோசனைகளை முன்வைத்து விளக்கமளிப்பதற்கு தேவையான அனுபவங்களை பெறக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இம்மாநாடு அமைந்துள்ளது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதர சேவைகள் அமைச்சு மற்றும் சக துறையை சாந்தவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவிக்கிறோம்.உலக பொருளாதார நெருக்கடியான் நிலையில் காணப்பட்டபோதிலும் எமது பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதார கல்வி அறிவை அரசு உரிய வகையில் நடைமுறைப்படுத்துகிறது. ஜப்பான் இத்தாலி போன்ற நாடுகள் எமது சுகாதார சேவையின் அபிவிருத்திற்கு பல வழிகளில் உதவி உள்ளன. இன்று இலங்கை அனைவரது கவனத்திற்கும் வந்துள்ளது.எனவே தான் இவ்வருடம் பல நிகழ்வுகளையும், மாநாடுகளையும் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவற்றுள் முக்கியமாக சார்க் வலய நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.
.தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பல படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எமது நோக்கம் இவை அனைத்தும் ஜனாதிபதியே சாரும்.எமது நாட்டிற்கு சர்வதேச சமூகம் பல உதவிகளை செய்து வருகிறது. வடக்கு, கிழக்கு என்ற பாரபட்சம் இன்றி மக்கள் ஒரே இன மக்கள் என நோக்கப்படுகிறார்கள்.” என தெரிவித்தார்.
அதேவேளை ஜெனீவாவில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “விடுதலை புலிகளிற்கு ஆதரவு தெரிவித்ததே இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லோரிற்கும் தெரியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விடுதலை புலிகளை ஆதரிப்பது பயங்கரவாதிகளை நேரடியாக ஆதரிப்பதாகவே கருதப்படும்.” எனத்தெரிவித்தார்