அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் !

எதிர்காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் தவறான புரிதல் ஏற்பட்டால் அணு ஆயுதப் போர் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகளின் அழுத்தங்கள் அணுவாயுதப் போருக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *