
• இலங்கை அரசே! தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து
• இலங்கை அரசே! தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர தீர்வை பகிரங்கமாக வை
• இலங்கை அரசே! தமிழ் மக்களை சொந்த மண்ணிலேயே அகதி முகாமுக்குள் அடைப்பதை நிறுத்து
• இந்திய அரசே! புலிகள் மீதான யுத்தம் தமிழ் மக்களின் மீதான யுத்தமே. இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்து.
• தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு
• கனடிய அரசே! இலங்கையில் நடந்துவரும் தமிழின அழிப்பை கண்டித்து ஐ. நா சபையூடாக அகதிகளை பராமரிக்கவும், மீள் குடியேற்றவும், மனித உரிமைகளை கண்காணிக்கவுமான ஒழுங்குமுறையை உடனடியாக செய்.
• கனடிய அரசே! ஐ.நா சாசனத்தின்படி சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் பூரண சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரக்கூடிய அரசியல் வழிமுறைகளைச் செய்
• உலக நாடுகளே! இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய உதவி தூதுவராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளுகிறோம். இந்த கோரிக்கைகளை முன் நிறுத்தி இவ் நிகழ்வில் இணைய விரும்பும் அமைப்புகள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மார்ச் 20, 2009 வெள்ளி
மாலை 3:00-7:00
இந்திய உதவி தூதுவராலயம் முன்பாக
365 Bloor St. E (@Sherbourne)
Sherbourne Subway
தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ, கனடா
இணைப்பு: இலங்கை, இந்திய அரசுகளே! தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை நிறுத்து! : தேடகம்
accu
கனடாவில் தேடுவாரற்றுக் கிடந்த தேடகம் இப்பொ எல்லோரும் சந்திக்குச் சந்தி கூத்துப் போடுவதால் தாமும் ஒரு கூத்துப் போட தூசி தட்டி வெளிக்கிட்டிருக்கினம். பாவம் இப்படியாவது தமது இருப்பை வெளிக்காட்டட்டும். தேசத்திலும் அவர்களின் இந்தச் செய்தி தேடுவாரற்று கிடந்ததால்தான் நான் ஒரு பின்னூட்டம் விட்டுள்ளேன்.