பிரான்சில் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் இன்று சனிக்கிழமை (14.03.2009) அன்று பிற்பகல் 14.00மணிக்கு பாரிசில் மெற்றோ Barbés Rochchouart முன்றலில் நடைபெற இருக்கிறது.
இவ் ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF ) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் ( Comité de Défense Social) சேர்ந்து ஒழுங்கு படுத்தியுள்ளனர். எனவே பிரான்சில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட அனைவரையும் மற்றும் சக அக்கறையாளர்களையும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையோடு அழைக்கிறார்கள் .
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் கரிசனையும் அக்கறையும் கொண்டு செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினர் சென்ற ஞாயிறு (07.03.2009) இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை பாரிசில் நடத்தினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் ஊர்வலத்தில் வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களுக்கு பிரான்சில் வதிவிட அனுமதி வழங்கவேண்டுமென்ற கோசத்தையும் முன்வைத்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
palli
அனைவரும் புலி கொடியுடன் வருக என பாரிஸில் சிலர் விளம்பரம் செய்தனராம்.
guna
நண்பர்களே தொடரட்டும் உங்கள் போராட்டம்! நல்லதையே நினையுங்கள்! நல்லதையே செய்யுங்கள்! மக்கள் உங்கள் பக்கம்! நாங்களும்உங்கள் பக்கம்.
sri
ஆக்கபூர்வமான செயற்பாடு. நானும் நல்லவர்கள் பக்கம்.
shathis
சமூக பாதுகாப்பு அமைப்பு தோழர்களின் மக்கள் நலன் சார்ந்த இப் போராட்டத்திற்கு பிரான்ஸ்சில் வாழும் இடதுசாரி நண்பர்கள் பூரண ஆதரவு வழங்கவேண்டும். பரந்த நோக்கமும் செயலூக்கமும் கொண்ட இவ்வாறான தோழர்களே இன்றைய சமூகத்திற்கு தேவை.
Kusumpan
தவிச்ச முயல் அடிக்கிறார்கள். ஊரிலை தலைவரும் எமது மக்களும் போராலும் பட்டிணியாலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில்லை இஞ்சையே இருக்கவிடு என்கிறார்கள். புத்திசாலிகள். தமிழீழம் வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிந்துவிட்டது இவர்களுக்கு. இப்பவே வதிவிட வசதி கிடைத்தால் தமிழீழம் வந்தாலும் போகாமல் இருக்கலாம் என்று நினைச்சிட்டார்கள்.
மாயா
ஆர்ப்பாட்ட ஊர்வலம் குறித்த தகவல்களை இணையுங்கள்
மாயா
//தமிழீழம் வந்தாலும் போகாமல் இருக்கலாம் என்று நினைச்சிட்டார்கள்.//
சாவுக்கு பயந்து ஓடி வந்தவை இங்கு போராடி என்ன பயன்? அங்கேயல்லவா இருந்திருக்க வேண்டும்.
புலிகளின் தாகம் தமிழரில்லா தாயகம்.