அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.
சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவகமாக செயல்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
palli
தொடங்கீட்டாங்கப்பா தொங்கு பாலத்துக்கு.
Suresh M.M.A
……. என்னதான் செய்யச் சொல்லுறிள் சனத்த?
சுரேஸ் டபுள் எம்.ஏ
பகீ
ஆயுதங்களைக் கையளிக்க மாட்டோம் – பேச்சாளார்
கையளிக்க எம்ம்மிடம் ஆயுதங்கள் இல்லை – கருணா
ஆயுதங்களைக் கையளிக்காவிட்டாலும் எமக்கு பரவாயில்லை – அமைச்சர்
முன்னர் மக்கள் விடுதலைப்ப்புலிகள் அலுவலகமாக இருந்தது அனால் பிறகு எஸ்.எல்.எஃப்.பி யாக மாத்திப்போட்டார் – மக்கள்
ஆனால் சுட்டது மட்டும் புலிதான் – பேச்சாளர்
எங்க போய் தலையை முட்டுறது!!!!!
palli
ஏழரை சனி கருனாவின் பக்கம் திரும்பி விட்டது போல் ஒரு கனவு.