கிழக்கு மாகாணத்தின் வீதிகளை அபி விருத்தி செய்வதன் பொருட்டு 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாவும், அம்பாறை மாவட்டத் திற்கென 500 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கென 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக கிழக்கு மாகாண வீதி, கிராமிய மின்சாரம், வீடமைப்பு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வை தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பல்வேறு குளங்களை புனரமைப்புச் செய்வதற் காகவும் 900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.