அக்குரஸ்ஸ – கொடப்பிட்டிய குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்கும் உரிய நட்ட ஈட்டினை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுத்தீன்; தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெற்று அவர்களுக்கு உடனடியாக நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, கொடப்பிட்டிய தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அமைச்சர் றிசாட் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மத விவகாரத்துடன் தொடர்புடைய வைபவத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலென்று தெரிவித்த அமைச்சர் எவர் இதனைச் செய்திருந்தாலும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.