யாழ். குடாநாட்டில் கடந்த மூன்று மாத காலமாக நிலவி வரட்சிக்குப் பின் நேற்றுக் காலை நல்ல மழை பெய்துள்ளது. சுமார் இருபது மில்லிமீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக குடாநாட்டின் வெப்பநிலை முப்பத்திநாலு சென்றிகிறேற் ஆக பதிவாகியிருந்தது.
குடாநாட்டில் நல்ல மழை பெய்திருப்பதால் விவசாயிகள் சிறுதானிய செய்கையில் ஈடுபட வாய்ப்பு உருவாகியிருப்பதாக விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது. மிளகாய், புகையிலை, வெங்காயம், மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் பெய்துள்ள மழை பெரும் வரப்பிரசாதமாகும். குடாநாட்டில் மழைவேண்டி ஆலயங்களில் விஷேட பூஜைகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.