புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட ஆனந்தவிகடன் புத்தகப் பிரதிகளை யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் அனுப்பியதன் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதர் சிங் மற்றும் அவரின் உதவியாளர் எஸ்.சுதர்சன் ஆகியோரை அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்தியாவில் அச்சிடப்படும் குறித்த புத்தகத்தில் புலிகள் அமைப்பின் படங்கள் மற்றும் செய்திகள் என்பன வரையப்பட்டிருந்தது அதனை விமானம் மூலம் யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு திரும்பியபோது கைது செய்யப்பட்ட இவர் கல்கிசைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரின் விடுதலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியிருப்பதாக பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.