புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் வழிமுறைகள் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வெளியேறுவதற்கு விரும்பும்போதும் அச்சுறுத்தல் சூழல்நிலை காரணமாக அவர்கள் வெளியேறுவது தடைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் தெற்காசிய ஊடகவியலாளர்கள் குழுவொன்றை சந்தித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
accu
விரைவாக இந்தப் பணியைச் செயல்ப்படுத்த முடிந்தால் எமது மக்களினது உயிர்களை காப்பாற்றுவது மட்டுமன்றி புலிகளால் வலிந்து இணைக்கப்பட்ட பல அப்பாவிப் போராளிகளையும் காப்பாற்றும் சந்தர்ப்பம் ஏற்ப்படலாம். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் இழப்புக்களை அதிகரிக்கும். புலித்தலைமையைக் காப்பாற்ற விசமத்தனமான புரளிகளை கிளப்புவோரை கணக்கிலெடுக்காது இப் பணிக்கு முழுஅளவிலான ஆதரவை எல்லோரும் வழங்கவேண்டும். நன்றி.