யாழ். மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் பணி இதுவரை கண்ணிவெடி அகற்றாமல் இருக்கும் எஞ்சியுள்ள ஒன்பது இடங்களில் அப்பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக யாழ்ப்பாண செயலகத்தில் இயங்கி வரும் கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டு செயலகம் தெரிவித்துள்ளது. “ஹலோ ரஸ்ட்’ மிதிவெடி அகற்றும் நிறுவனம் சங்கத்தானை கல்லூரி வீதி, சங்கத்தானை கோவிலடி, நுணாவில் கிழக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஊர்காவற்றுறை, கரம்பொன், செம்மணிக்குளம், புத்தூர் மேற்கு, சங்கத்தானை ஆகிய இடங்களிலும் மிதிவெடி அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாண்டுக்குள் யாழ்.குடாநாடு கண்ணிவெடியற்ற பிரதேசமாகுமெனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.