அரசாங்கம் பெண்களுக்கான குறைந்தபட்ச உதவியையேனும் பெற்றுக்கொடுப்பது பொறுப்பும் கடமையுமாகுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். எதிர்கட்சித், தலைவரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
நாட்டில் பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்து வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ள முடியாது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதால் நாளுக்கு நாள் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் குறைந்த பட்ச பாதுகாப்பையேனும் பெற்றுக்கொடுப்பது அரசின் பொறுப்பும் கடமையாகும். எமக்கு இதனால் இத்தருணத்தில் மகிழ்ச்சியடைய முடியாது.
வடக்கு, தெற்கு என்றில்லாமல் சகல இன மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகளிர் தினத்தன்று அணைவரும் வரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து போகின்ற போது பெண்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.