இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு விசாரணைகளுக்கு உதவ அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியைச் சந்தித்துக் கலந்துரையாடிய எப்.பி.ஐ. யின் பணிப்பாளர் றொபர்ட் மியூலர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தமது உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர் ஏன் பெட்டர்சன் மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் உள்விவகார ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.