இந்திய மருத்துவ குழுவினர் 9ஆம் திகதி இலங்கை வருவர்

india-doctors.jpgஇந்திய மருத்துவ குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. வன்னியில் காயமடைந்து திருகோணமலை வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலேயே இந்த குழு இலங்கை வருகின்றது. புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவை அமைக்கும் நோக்கிலேயே இந்த மருத்துவ குழு இலங்கை வருவதாக இந்தியத் தூதுரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை வரும் இக்குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளனர். இந்த மருத்துவ குழுவில் அனுபவம் வாய்ந்த 8 நிபுணர்களும் மற்றும் சத்திர சிகிச்சை வல்லுனர்களும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

தேவையான மருந்து பொருட்களையும் இந்தக் குழுவினர் எடுத்து வரவுள்ளனர். இதேவேளை, 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் சாதனங்களையும் இந்த குழுவினர், இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    கருத்து முரன்பாடு இன்றி வருக வருக என வரவேற்க்கிறோம்.

    Reply
  • murugan
    murugan

    புல்மோட்டை ஏற்கனவே இந்திய முதலாளிகளுக்கு பீங்கான் தொழிற்சாலை போட கையளிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டதாக கடந்த வருடம் அறிய முடிந்தது. இப்போது மருத்துவக் குழுவும் திருமலையில் கப்பல் தரித்து நிற்கப் போவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையே. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

    Reply
  • santhanam
    santhanam

    குடிக்க நீர் இன்றி உண்ண உணவின்றி நோய்க்கு மருந்தின்றி அன்றாடம் நுற்றுகணக்கில் மக்கள் உயிருடன் கொல்லப்படுகின்ற ஒரு சபிக்கப்பட்ட பூமியாக உள்ளது. யாரால் சபிக்கப்பட்டது என்றால் அது ஏகாதிபத்தியம் என்னும் சாத்தானால் தான்.

    Reply