சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதர் மைக்கார்னை, பழ.நெடு மாறன் தலைமையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சந்தித்தனர். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த இங்கிலாந்து தலையிட கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது இலங்கைப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உடன் இருந்தனர். இந்த மனுவை அளித்த பின்னர் நிருபர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது :
இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்து முன் வரவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். அவசியம் உரிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளதாக கூறியதைத்தொடர்ந்து பேசிய வைகோ, 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையெழுத்து போடுகிறார்கள். அமெரிக்க அதிபர், ஐ.நா.பொது செயலாளர், ரஷ்ய அதிபர் ஆகியோருக்கு கையெழுத்துக்களை அனுப்புவோம். கட்சி எல்லைகளை கடந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. எனவே அரசியல் கூட்டணிக்கும், இலங்கை தமிழர்களை காக்க போராடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து போராடுவோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உரிய நேரத்தில் கூடி முடிவு செய்வோம் என்றார்.
palli
இதோ பாருங்கோ. இது நல்லாவே இல்லை. அவர்களிடம் புடுங்குபட்டு தனிகுடிதனம் (சுகந்திரம்) கேட்டுபுட்டு இப்போ அவர்களிடமே போய் நியாயம் கேட்டால் சரியாகுமா? இருப்பினும் அதை விட்டால் வேறுவழியில்லை. கேளுங்க கேளுங்க அப்புறமாய் மேடையில் மாத்தி முழங்கலாம்.
பார்த்திபன்
வைகோ சில மாதம் முன்பு தானே பிரித்தானிய பராளுமன்றக் கட்டிடத்தில் தனது முழக்கம் பற்றியும்இ தனது முழக்கத்தைக் கேட்டு வெள்ளைகளே மிரண்டு போனார்கள் என்று இந்தியா திரும்பி மேடைகளில் முழங்கினார். இப்ப தான் விளங்குது வெள்ளைகள் வைகோவின் ஆங்கிலம் புரியாமல்த் தான் மிரண்டு போயிருக்கின்றார்கள் என்று. அப்ப விளங்கிற மாதிரிப் பேசியிருந்தால் திரும்பவும் இப்படி அறிக்கை கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது…….