முல்லைத்தீவிலிருந்து 7வது தொகுதி காயமடைந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என 157 பேர் நேற்று அழைத்துவரப்பட்டனர்

trico.gifமுல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக 7வது தொகுதியாக நோயாளர்கள் கர்ப்பிணிகள் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 157 பேர் நேற்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 50 ஆண்கள் 81 பெண்கள் 26 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் 42 ஆண்களும் 45 பெண்களும் வைத்திய சிகிச்சைகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களுடன் உதவிக்கு வந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் திகதி முதல் இதுவரை 7 தொகுதிகளில் கடல் வழியாக நோயாளர்கள் காயமடைந்தவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 2553 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • palli
    palli

    ஜயோ வங்கம் தந்த பாடத்தை விட வன்னி தரும் பாடம் உலக மக்களுக்கு மிக ஒரு பாடமாக அமையும். உன்மையில் சந்ததியார் ஒரு தீர்க்கதரிசிதான். வங்கம்தந்த பாடம் போல் தமிழருக்கு ஒருநிலை வரும். அதை வராமல் தடுக்க இயக்க(அனைத்து) படிக்க வேண்டிய செய்தியாக தமிழில் மொழி பெயர்த்தாரோ. யார் கேட்டான் அவர் அனுபவத்தை.

    Reply
  • santhanam
    santhanam

    (உன்மையில் சந்ததியார் ஒரு தீர்க்கதரிசிதான். வங்கம்தந்த பாடம்) புளட் அழிந்ததே இந்த வங்கம் தந்த பாடம் எழுதிதான் சொந்த மருமகனை கொண்டுதான் சந்ததியை இந்திய றோ போட்டது அவரின் உடல் எங்குள்ளது என்று தெரியாதபடி தான் செய்தவர்கள்.உமாவையும் கொழும்பில் வைத்து றோ தான் போட்டது.போட்டவர் அன்மையில் தான் இந்தியாவில் இறந்தவர் பல்லி.

    Reply
  • VADIVELU
    VADIVELU

    எனக்கு சில நாட்களாக ஒரு சந்தேகம். முடிந்தால் யாராவது தீர்த்து வையுங்கோ பிளீஸ்!!. அதாவது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டு செல்லப்படுகின்ற நோயாளர்களும், தப்பியோடுகின்ற பொது மக்களும் காணாமல் போவதாகவும், படையினரின் சித்திரவதைகளுக்குள்ளாவதாகவும் சில ஊடகங்களில் தொடர்ந்து கூறி வருகின்றார்களே! அப்ப ஏன் அவர்கள் அங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ள போகனும்?

    Reply
  • palli
    palli

    சந்தானம் நீங்கள் ரெலோவை பற்றி சொன்னதுக்கே பல்லி என்னும் அதிர்ச்சியில் இருந்து நீங்கவில்லை. அதுக்கிடையில் கழகம் பற்றியா?? கழக நன்பர்கள் பலர் தேசத்தில் உண்டு. இதுக்கு மேலாக பல்லிக்கு தனிபட்ட முறையில் சந்ததியார் நண்பர். அதே போல் இடையில் இந்தியாவில் இறந்தவர் உமாவின் கொலையில் உதவியவர்தான் கொலையாளியல்ல. அவர்தான் உமாவின் பாதுகாவலர் கொலையாளிகள் வந்ததும் உமாவை விட்டு இவர் கொலையாளிக்கு சாதகமாக தப்பி ஓடிவிட்டாராம். இது கதையல்ல நிஜம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வடிவேலு நீங்களொன்று இந்த ஊடகங்கள் அப்படித் தொடர்ந்து கூறிப் பயமுறுத்துவதே மேலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறாமல் தடுப்பதற்கே. அப்போ தானே மக்களைக் கேடயங்களாக புலிகளும் பாவித்துத் தம்மைப் பாதுகாக்க முடியும்.

    Reply
  • santhanam
    santhanam

    நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது அந்த பாதுகாவலனிற்கு உமாவில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுதான். புளடடின் புலனாய்வு பொறுப்பாளர் முள்ளிகுளத்தில் தாக்குதலில் இறந்ததிற்கு உமாதான் காரணம் என்ற வாதம்தான் புலனாய்வு பொறுப்பாளர் அவரது நெருங்கிய உறவினர்.

    Reply
  • palli
    palli

    இதெல்லம் மக்களுக்கு தெரியபட வேண்டிய சமாசாரம் சந்தானம். ஆரம்பத்தில் இயக்கம் காட்டில் இருந்து ஊரில் வந்து தாக்குதல் நடத்தியது. 30 வருடம் கழித்து ஊரில் இருந்து காட்டுக்கை போய் தாக்குதல் நடத்துகிறது. இதைதான் பல்லியின் பாசையில் பரிமாண வளர்ச்சி என்பது.

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி 80 களில் இந்தியாவிலிருந்து இரண்டு பேரை நாடுகடத்தியது அவர்கள் வேறு ஒரு நாட்டு உளவாளிகள் ஆக காட்டப்பட்டு பின்பு இந்தியாவிற்குள் உள்வாங்கபட்டு ஒருவர் ஏதிலிகளின் காப்பாளராகவும் மற்றவர் தமிழரின் தலைசிறந்த ராசதந்திரியாகவும் இந்தியாவால் உலகத்திற்கு காட்டபட்டு எ.ம்.யி ஆர் முலம் உதவி வழங்கபட்டு 1994 காலப்பகுதியில் இந்திய பத்திரிகைக்கு ஒருவர் இப்படி பேட்டி கொடுத்தார் யாழ்ப்பாணம் பிடிப்பதற்கு தயாரான நிலையில் இராணுவம் பலமான நிலையில் வருமானால் புலிகள் பின்நகர்வார்கள் என்று இதன் அர்த்தம் என்ன பல்லி .விளக்கமாக பின்பு பார்ப்போம் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் இந்தியா பலதலத்திலிருந்து தமிழரிற்கு மிளகாய் அரைத்துள்ளது.

    Reply
  • palli
    palli

    சந்தானம் நீங்கள் சொல்லிய இருவர் சந்திரகாஸன்; பாலசிங்கம். இருவரும் அமெரிக்க உளவாளி எனதானே. அத்துடன் சோவும் சேர்க்கப்பட்டார்.
    இதில் வேடிக்கை என்னவெனில் அந்த சம்பவத்துக்கு (நாடு கடத்தல்) பின் மூவரும் மிக வெளிப்படையாகவே செயல்பட்டனர். எப்படி என்பதை வெள்ளிதிரையில் பார்க்கவும்.

    Reply