வங்கதேச எல்லைக்காவல் படையினரின் கலவரங்களில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் புதைகுழிகள் மேலும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் காணாமல் போன 70 அதிகாரிகளைத் தேடும் முயற்சிகளின்போது, தலைநகர் டாக்காவின் காணி ஒன்றுக்குள் ஆழமில்லாமல் இருந்த புதைகுழிகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் காணப்பட்ட 10 சடலங்களில் இராணுவ கட்டளை அதிகாரியின் மனைவியின் சடலமும் அடங்கும் என்று பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது.சடலங்கள் எரிந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது.