இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போது இராணுவ தலைமை அதிகாரியாகக் கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரல் நிசங்க விஜேசிங்க நாளையுடன் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார். இவரது வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்படவுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படைப் பிரிவுக் கட்டளைத் தளபதியாக கடந்த 3 வருடங்கள் பணியாற்றிய இவர் அண்மையில் இராணுவத்தின் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டார் எனவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.