புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் கனரக பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கெதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான இராணுவத்தின் 53ஆம் படையணியினர் சில தினங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 மி.மி. கனரக பீரங்கி இரண்டைக் கண்டுபிடித்திருந்தனர். 27 கிலோ மீற்றர் சுடுதூரத்தைக் கொண்ட இந்த பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கு எதிராக வன்னியில் குண்டுகளை ஏவி வருகின்றன.
இது தொடர்பாக களமுனையில் உள்ள படை வீரர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றும் நோக்குடன் நாம் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். புலிகளின் இந்த கனரக பீரங்கிகள் கைப்பற்றப்பட்டமை வியக்கத்தக்க வெற்றியாகும். இந்தப் பீரங்கிகளினூடாக நாம் இன்று எமது எதிரியை தாக்கி வருகின்றோம் எனக்கூறினார்.
palli
புலியிடம் பறித்து அரசு அதே ஆயுததால் புலியை தாக்குவதும். அரசிடம் பறித்து அதில் சிலதால் புலி அரசை தாக்குவதும் சகசம்தானே. ஆனால் இதில் ஒரு ஒற்றுமை என்னவெனில் இருவருமே எதிரியை விட மக்களை அழிப்பதுதான் அதிகம்.
பார்த்திபன்
மொத்தத்தில் புலிகளிடமிருந்து பறித்த பீரங்கிகள் என்பதை விட, அரசு ஏற்கனவே பறிகொடுத்த பீரங்கிகளை இப்ப திரும்பவும் கைப்பற்றியுள்ளதெண்டு வேணுமெண்டால் சொல்லலாம்.
Kusumbo
அரசாங்கமும் கெரில்லாப்போரை படிச்சிட்டாங்கள் போலைகிடக்கு. புலியளிலை இருந்து அசராங்கத்துக்க மாறினாலும் மாறினாங்கள் உந்த யுத்த தந்திரத்தையுமெல்லே சொல்லிக் குடுத்துட்டாங்கள். இப்பிடியியும் இருக்கும் காசை வாங்கிக்கொண்டு புலியளே சொல்லிக் குடுத்திருப்பாங்கள்.
VADIVELU
இதைத்தான் சொல்றது “கம்பைக் கொடுத்து அடி வாங்குறதெண்டு”.